மட்ரிட்டை பழிவாங்கும் முனைப்பில் பயர்ன்

மட்ரிட்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துத் தொடரின் காலிறுதி 2ஆம் சுற்றில் ரியால் மட்ரிட், பயர்ன் மியூனிக் குழுக்கள் மோதவிருக்கின்றன. முதல் சுற்றில் 1=2 என ரியால் மட்ரிடிடம் அடைந்த தோல்விக்கு பதிலளிக்கும் வகையில் பயர்ன் நாளை அதிகாலை நடைபெற உள்ள இப்போட்டியில் விளை யாடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆனாலும் ராபர்ட் லெவன் டோவ்ஸ்கி, மேட்ஸ் ஹம்மல்ஸ் ஆகிய இருவரும் விளையாட முடியாத நிலையில், பயர்ன் குழுவின் நம்பிக்கை நட்சத்திர மாக இருப்பது மானுயேல் நியுர் மட்டும் தான். மேலும், பயர்ன் கடைசி 4 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றியைச் சுவைத்து உள்ளது. எதிரணி மண்ணில் நடந்த இரண்டு ஆட்டங்களிலும் அக் குழு கோல் எதுவும் போட வில்லை என்பதும் கவனிக்கத் தக்க ஒன்று.