விராத் கோஹ்லி: மோசமாக விளையாடினால் வெற்றி பெறமுடியாது

பெங்களூரு: ஐபிஎல் தொடரில் ஞாயிறு இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது. பெங்களூரு அணிக்கு இது 4வது தோல்வியாக அமைந்தது. 5 ஆட்டத்தில் அந்த அணி ஒரு வெற்றி மட்டும் பெற்றுள்ளது. தோல்வி குறித்து விராத் கோஹ்லி கூறும்போது, "இதேபோன்று நாங்கள் விளையாடினால், வெற்றி பெறத் தகுதியானவர்களாக இருக்கமுடியாது. கடந்த ஆட்டத்தில் நாங்கள் போராடினோம். ஆனால் இந்த ஆட்டம் எங்கள் கண்முன்னே எங்களை விட்டுக் கைநழுவிச் சென் றது. "கடந்த பருவத்தில் தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தோம். தொழில்முறை கிரிக்கெட் வீரர்களாக, ஒரு அணிக்காக ஏராளமான ரசிகர்கள் முன்னிலையில் விளையாடும் போது இதுபோன்ற ஒரு ஆட் டத்தை விளையாடக்கூடாது. வீரர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!