வெற்றிப் பாதைக்குத் திரும்பிய ஆர்சனல்

மிடில்ஸ்பரோ: இங்கிலிஷ் பிரிமியர் லீக் தரவரிசையில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் தனது இலக்குக்கு ஆர்சனல் குழு ஒருவழியாகப் புத்துயிர் ஊட்டி யுள்ளது. நேற்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் அது மிடில்ஸ்பரோ குழுவை 2-=1 என்ற கோல் எண் ணிக்கையில் வென்றதன் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளது. ஆட்டத்தின் தொடக்கம் விறுவிறுப்பு இல்லாமல் இருந்தபோதும் இடைவேளைக்குச் சற்று முன் கிடைத்த ஃப்ரீக் வாய்ப்பைப் பயன்படுத்தி தமது அணிக்கு அபாரமான கோல் ஒன்றை ஆர்சனலின் அலெக்சிஸ் சாஞ்செஸ் போட்டார். ஆனால், இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய ஐந்தே நிமிடங்களில் மிடில்ஸ்பரோவுக்காக ஒரு கோல் போட்டு ஆட்டத்தை சமன் செய்தார் அல்வாரோ நெக்ரேடோ. எனினும், சலிப்படையாத ஆர்சனல் குழு, மெசுட் ஒசில் மூலம் ஆட்டத்தின் 71ஆம் நிமிடத்தில் மேலும் ஒரு கோல் போட்டு 2=1 என ஆட்டத்தை நிறைவு செய்தது.

இதன்மூலம் தரவரிசைப் பட்டி யலின் ஆறாவது இடத்துக்கு முன்னேறிய ஆர்சனல், நான்காம் நிலையிலுள்ள மான்செஸ்டர் சிட்டியைவிட ஏழு புள்ளிகள் குறைவாகப் பெற்றிருப்பினும் சிட்டி குழு கூடுதலாக ஓர் ஆட்டம் விளையாடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய ஆட்டத்தில் இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய ஐந்து நிமிடங்களிலேயே மிடில்ஸ்பரோ குழுவுக்காக அல்வாரோ நெக்ரோடோ (இடக்கோடி, சிவப்பு மேல் சட்டையுடன்) கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தார். ஆனால், இந்த நிலை அதிக நேரம் நீடிக்கவில்லை. ஆர்சனலின் மெசுட் ஒசில் ஆர்சனலின் இரண்டாவது கோலை போட்டு மிடில்ஸ்பரோ தோல்வியைத் தழுவவைத்தார். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!