பயர்ன்: காணொளி முறை வேண்டும்’

மட்ரிட்: ரொனால்டோவின் கோல்கள் சர்ச்சையைக் கிளப்பினாலும் 6=3 என்ற ஒட்டுமொத்த கோல் கணக்கில் பயர்ன் மியூனிக் குழுவை வெற்றி கொண்டு சாம்பியன்ஸ் லீக் காற்பந்துத் தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்றது ரியால் மட்ரிட். பிற்பாதி ஆட்ட நேரம் வரை கோல் எதுவும் விழாத நிலையில், 53வது நிமிடத்தில் தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி கோலைப் புகுத்தி னார் பயர்ன் குழுவின் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி. அதை 76வது நிமிடத்தில் சமன் செய்தார் ரொனால்டோ. ஆனால் ரொனால்டோவின் அந்த முயற்சியை வீணாக்கும் வகையில் அமைந்தது அடுத்த கோல். அதாவது, பயர்ன் குழுவை மீண்டும் 1=2 என முன்னிலை பெறச் செய்தது 77வது நிமிடத்தில் ராமோஸ் புகுத்திய சொந்த கோல். இதனால் 3-=3 என்ற ஒட்டு மொத்த கோல் எண்ணிக்கையில் சமநிலை கண்ட ஆட்டம் கூடுதல் நேரம் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்கிடையே, தப்பாட்டம் காரணமாக பயர்னின் விடல் இரண்டு மஞ்சள் அட்டை காண் பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். கூடுதல் நேரத்தின் போது, ரொனால்டோ இரண்டு கோல் களையும் அசின்சோ ஒரு கோலை யும் புகுத்த 4=2 என முன்னிலைப் பெற்றது ரியால் மட்ரிட்.

எனவே 6=3 என்ற ஒட்டு மொத்த கோல் எண்ணிக்கையில் அரையிறுதிக்கு முன்னேறியது ரியால் மட்ரிட். இப்போட்டியில் மூன்று கோல் களைப் புகுத்தியதன் மூலம், சாம்பியன்ஸ் லீக் தொடரில் 100 கோல்களை எட்டியவர் என்ற பெருமையைப் பெற்றார் ரொனால்டோ. ரொனால்டோவின் சர்ச்சை கோல் இதற்கிடையே, கூடுதல் நேரத் தின்போது ரொனால்டோ புகுத் தியது 'ஆஃப்சைட்' கோல் என்று ரசிகர்கள் கூறிவரும் நிலையில், அதை நடுவர் கோலாக ஏற்றுக் கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பயர்னின் விடல், விதி முறைகளுக்கு உட்பட்டு விளை யாடியபோதும் அவருக்கு இரண்டாவது மஞ்சள் அட்டை காண் பிக்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"காலிறுதியில் சிறந்த நடுவரை நியமிப்பது மிகவும் முக்கியமானது அல்லது முடிவுகளைத் தீர்மானிக்க காணொளி முறையை அறிமுகப்படுத்தவேண்டும். ஏனெனில், இங்கு அதிக தவறுகள் நடக்கின்றன," என்றார் பயர்னின் நிர்வாகி கார்லோ அன்சிலோட்டி. மற்றோர் ஆட்டத்தில், லெஸ் டர் சிட்டி குழுவை 1=2 என்ற ஒட்டு மொத்த கோல் எண் ணிக்கையில் வீழ்த்திய அட்லெட் டிகோ மட்ரிட் அரையிறுதிக்கு முன்னேறியது.

பயர்ன் மியூனிக் குழுவிற்கு எதிரான 2வது சுற்று ஆட்டத்தில் மூன்று கோல்களைப் புகுத்திய ரொனால்டோ, சாம்பியன்ஸ் லீக் தொடரில் 100 கோல்களை எட்டியுள்ளார். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!