இறுதி ஆட்டத்துக்குக் குறிவைக்கும் சிட்டி, ஆர்சனல்

லண்டன்: இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டிக் கான அரையிறுதி ஆட்டத்தில் ஆர்சனலும் மான்செஸ்டர் சிட்டி யும் இன்று இரவு மோதுகின்றன. வெம்ப்ளி விளையாட்டரங்கத் தில் நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெறும் குழு இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெறும். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக ஏமாற்றங்களைச் சந் தித்து வரும் ஆர்சனல், சிட்டியை முறியடிக்க வேண்டுமாயின் கவ னத்தைச் சிதறவிடாமல் சிறப்பாக விளையாடவேண்டும்.

அண்மையில் நடைபெற்ற ஆட் டங்களில் சிறப்பாக விளையாடாத காரணத்தினால் ஆர்சனல் இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் ஆறாவது இடத்துக்குச் சரிந்து உள்ளது. அதுமட்டுமல்லாது, பயர்ன் மியூனிக்கிடம் தோல்வி அடைந் ததை அடுத்து அதன் சாம்பியன்ஸ் லீக் கனவும் கலைந்தது. மிடல்ஸ்புரோ குழுவுக்கு எதிராகக் கடுமையாகப் போராடி ஒருவழியாக 2=1 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது. பிரிமியர் லீக், சாம்பின்ஸ் லீக் ஆகிய போட்டிகளில் கிண்ணம் வெல்லும் வாய்ப்பு கைவிட்டுச் சென்றுள்ள நிலையில், எஃப்ஏ கிண்ணத்தை எப்படியும் வெல்லவேண்டும் என்று ஆர்சனல் விழைகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!