இக்கட்டில் யுனைடெட்

யூரோப்பா லீக் காற்பந்துப் போட்டி யில் ஆண்டர்லெக்ட் குழுவுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டின் நட்சத்திர வீரர் ஸ்லாட்டன் இப்ராகிமோவிச், மார்க்கஸ் ரோஹோ ஆகிய இருவரும் காயமுற்றனர். வலது முழங்காலில் அடிபட்ட இப்ராகிமோவிச்சின் காயம் சற்று மோசமாக இருப்பதாக யுனைடெட்டின் மருத்துவக் குழு தெரிவித்துள்ள நிலையில், இப் பருவத்துக்கான மீதமுள்ள ஆட் டங்களில் அவரால் களமிறங்க முடியாத நிலை ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது. அதுபோல் காயமடைந்த ரோஹோ இன்னும் எத்தனை ஆட்டங்களுக்கு விளையாட முடியாது என்றும் தெரியவில்லை. “யுவான் மாட்டா, கிறிஸ் ஸ்மாலிங், ஃபில் -ஜோன்ஸ் ஆகி யோரும் காயம் காரணமாக ஏற் கெனவே விளையாடாத நிலை யில், இப்ராகிமோவிச்சும் விளை யாட முடியாமல் போனால், அது மேன்யூவிற்கு கடும் இக்கட்டாக போய்விடும்,” என்றார் அதன் நிர்வாகி மொரின்யோ. ஆனால், தாக்குதல் ஆட்டக் காரர் ரூனி இருக்கிறார். மேலும் இப்பருவத்தில் மீண்டும் விளை யாட மாட்டா வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என மொரின்யோ சொன்னார்.

ஆண்டர்லெக்ட் குழுவுக்கு எதிரான யூரோப்பா லீக் காற்பந்துப் போட்டியில் காயமடைந்த மேன்யூ வீரர் இப்ராகிமோவிச்சால் இப்பருவத்தில் தொடர்ந்து விளையாட முடியாது என அஞ்சப்படுகிறது. படம்: ஏஎஃப்பி