ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை அணி வெற்றிப் பயணம்

மும்பை: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றுமுன்தினம் இரவு மும்பை வான்கடே விளையாட்டரங்கில் அரங்கேறிய 25வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்சை எதிர்கொண்டது. பூவா தலையாவில் வென்ற டெல்லி கேப்டன் ஸாகீர் கான் முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் பேட்டிங்கை தொடங்கிய மும்பை வீரர்கள் அதிரடி காட்ட முடியாமல் தடுமாறினர். டெல்லி பவுலர்களின் ஆக்ரோஷமான பந்துவீச்சு மும்பையின் ரன்வேட்டைக்கு முட்டுக்கட்டை போட்டது. தொடக்க ஆட்டக்காரர் பார்த்தீவ் பட்டேலை (8 ரன்) ரபடா கிளன் போல்டாகினார். இன்னொரு தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் (28 ஓட்டங்கள்) ரன்-அவுட் ஆனார். நிதிஷ் ராணா (8 ஓட்டங்கள்), கேப்டன் ரோகித் சர்மா (5 ஓட்டங்கள்) தாக்குப்பிடிக்கவில்லை. அடுத்து எளிய இலக்கை நோக்கி ஆடிய டெல்லி பேட்ஸ்மேன்களும் தகிடுதத்தம் போட்டனர். முதல் ஓவரிலேயே ஆதித்யதாரே (0) ரன்-அவுட் செய்யப்பட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!