மோசமான பந்தடிப்பு; வேதனையில் கோஹ்லி

கோல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கடந்த பருவத்தில் அதிக ஓட்டங்களைக் குவித்து சாதனை படைத்த பெங்களூரு அணி, இப்போது வெறும் 49 ஓட்டங்கள் எடுத்து ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைவான ஓட்டம் என்ற மோசமான பதிவை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பருவத்தில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 263 ஓட்டங்கள் குவித்து, ஐபிஎல் போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த அணி என்ற சாதனையைப் படைத்திருந்தது பெங்களூரு. நேற்று முன்தினம் நடந்த போட் டியில் முதலில் பந்தடித்த கோல் கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் 19.3 ஓவர்களில் 131 ஓட்டங்க ளுக்கு பறித்தது பெங்களூரு. அதற்கு பழிவாங்கும் நோக் கோடு விளையாடிய கோல்கத்தா அணி, பெங்களூருவை 9.4 ஓவர் களில் வெறும் 49 ஓட்டங்களுக்கு சுருட்டியது. பெங்களூரு அணி வீரர்கள் யாரும் ஓட்ட எண்ணிக்கையில் இரட்டை இலக்கத்தை எடுக்க வில்லை.

ஐபிஎல் போட்டியில் மிகக் குறைவான ஓட்டங்களைப் பதிவு செய்தது பெங்களூரு அணி. அதனால் வேதனையில் இருந்த கோஹ்லிக்கு ஆறுதல் கூறும் டி வில்லியர்ஸ். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!