சிட்டியை வெறும் கையோடு அனுப்பிய ஆர்சனல்

லண்டன்: நேற்று முன்தினம் நடைபெற்ற எஃப்ஏ கிண்ண அரையிறுதி காற்பந்து போட்டியின் கூடுதல் நேரத்தில் ஆர்சனலின் அலெக்சிஸ் சாஞ்செஸ் தமது அணியின் இரண்டாவது கோலை போட்டு அந்த அணி மான்செஸ்டர் சிட்டியை 2-=1 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி கொள்ள வைத்தார். நேற்றைய ஆட்டத்தின் முதல் கோலைப் போட்டது என்னவோ சிட்டிதான். ஆனால், சிட்டியின் அகுவேரோவை சரிவர தடுத்து நி-றுத்தாததால் அவரை கோல் போடவிட்ட ஆர்சனலின் மொன் ரியால், ஆட்டத்தின் 71ஆம் நிமிடத்தில் தமது அணி சார்பாக ஒரு கோல் போட்டு ஆட்டத்தை 1-=1 என சமன் செய்தார். இதன்மூலம் காற்பந்து பயிற்று விப்பாளராக செயல்பட ஆரம்பித்த நாளிலிருந்து இதுவரை ஒரு பருவத்தில்கூட விருது வெல்லாமல் இருந்ததில்லை என்ற கார்டியோ லாவின் பெருமை முடிவுக்கு வந்துள்ளதாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது.

ஆர்சனல் வீரர்களின் வெற்றிக் கொண்டாட்டத்தை ஏமாற்றத்தோடு பார்க்கும் சிட்டி வீரர் கெவின் டி புருன். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!