பிராவோவுக்குப் பதிலாக இர்பான் பதன்

புதுடெல்லி: பத்தாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் குஜராத் அணியில் இடம்பெற்றிருந்த மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த வெய்ன் பிராவோ காயம் காரணமாக ஒரு போட்டியில்கூட ஆடாமல் இருந்தார். மேலும், காயம் ஆறாததால் சிகிச்சை மற்றும் ஓய்வுக்காக தன்னுடைய சொந்த நாட்டிற்கு அவர் திரும்பியுள்ளார். இந்நிலையில், அவரின் இடத்தை நிரப்ப இந்திய அணியின் முன்னாள் இடது கை பந்து வீச்சாளர் இர்பான் பதானை அந்த அணியின் நிர்வாகம் தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற வீரர்களின் ஏலத்தின்போது இரு முறை இடம் பெற்றும் இர்பான் பதானை எடுக்க எந்த அணியும் முன் வரவில்லை. 102 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இர்பான் பதான் 80 விக்கெட்டுகள் மற்றும் 1,137 ஓட்டங்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!