காற்பந்து: மோதக் காத்திருக்கும் மான்செஸ்டர் அணிகள்

மான்செஸ்டர்: இந்தக் காற்பந்துப் ப-ருவத்தில் மான்செஸ்டர் சிட்டியோ மான்செஸ்டர் யுனைடெட்டோ பிரிமியர் லீக் விருது, எஃப்ஏ கிண்ண விருது எதையும் வெல்லப் போவதில்லை. மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு மட்டும் யூரோப்பா கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால், சாம்பியன்ஸ் லீக் காற்பந்து விளையாடுவதையே இலக்காகக் கொண்டுள்ள இன் றைய காற்பந்து உலகில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் தரவரிசையில் முதல் நான்கு இடங்களில் ஒன்றைப் பிடித்தால் மட்டுமே அது சாத்தியம் என்ற நிலை உள்ளது.

இதனால், நாளை அதிகாலை இரு மான்செஸ்டர் அணிகளும் மோதும் பிரிமியர் லீக் தற்பொழுது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் தற்பொழுது இந்தப் பருவத்தில் பயிற்றுவிப்பாளராக அடியெடுத்து வைத்துள்ள பெப் கார்டியோலா இதற்கு முன் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய அனைத்துக் குழுக் களையும் ஏதாவது ஒரு விருது வெல்ல வைத்துள்ள நிலையில், இந்தக் காற்பந்து பருவம் அவ ருக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது.