பிடியை வலுவாக்கிய செல்சி

லண்டன்: சௌத்ஹேம்டன் காற் பந்துக் குழுவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் செல்சி குழு பட்டியலில் தனது முதல் நிலையை வலுவாக்கிக் கொண்டிருக்கிறது. ஈடன் ஹஸார்ட், குழுத் தலைவர் கேரி கேஹில், டியேகோ கோஸ்ட்டா (2) ஆகியோர் அடித்த கோல்களால் இந்தப் பருவத்தில் இரு கிண்ணங்களை வெல்லும் வாய்ப்பையும் அக்குழு உறுதிப் படுத்திக்கொண்டுள்ளது. சில நாட்களுக்குமுன் எஃப்ஏ கிண்ண அரையிறுதிப் போட்டியில் இதே கோல் வித்தியாசத்தில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவை செல்சி தோற்கடித்திருந்தது.

வெம்ப்ளி அரங்கில் நடந்த அந்தப் போட்டியில் ஹஸார்ட், கோஸ்ட்டா ஆகியோருக்கு ஓய்வு அளித்த செல்சி குழு நிர்வாகி அன்டோனியோ கோன்டே, நேற்று அதிகாலை சௌத்ஹேம்டனுக்கு எதிராக நடந்த இபிஎல் ஆட்டத்தில் அவ்விருவரையும் தொடக்கத் திலேயே களமிறக்கினார். அவரது அணுகுமுறைக்கு உடனடி பலன் கிட்டியது. ஆட்டத்தின் 5வது நிமிடத்திலேயே கோலடித்து செல்சிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார் ஹஸார்ட். ஆனாலும் 24வது நிமிடத்தில் பதில் கோலடித்து ஆட்டத்தைச் சமனுக்குக் கொண்டு வந்தார் முன்னாள் செல்சி வீரரும் இந்நாள் சௌத்ஹேம்டன் ஆட்டக்காரரு மான ஒரியால் ரொமேவ்.

கடைசியாக ஆடிய ஏழு ஆட்டங்களில் கோலடிக்க முடியாமல் தவித்து வந்த நிலையில் நேற்று சௌத்ஹேம்டன் குழுவிற்கு எதிராக இரண்டு கோல்களை அடித்து அரங்கை அதிர வைத்த செல்சி ஆட்டக்காரர் டியேகோ கோஸ்ட்டாவை (இடது) பாராட்டுகிறார் நெமான்யா மாட்டிச். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!