25 வயதிலேயே ஓய்வுபெற்றார்!

லண்டன்: அனைத்துலகப் போட்டிகளில் அறிமுகமாகி ஆறு மாதங்களே ஆனநிலையில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்துள்ளார் இங்கிலாந்தின் ஸாஃபர் அன்சாரி, 25 (படம்). சரே கவுண்டி அணிக்காக விளையாடி வந்த அன்சாரி, கடந்த ஆண்டு பங்ளாதேஷ், இந்திய அணிகளுக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றார். "எனது ஓய்வு அறிவிப்பு ஆச்சரியமளிப்பதாக இருக்கும் என்பதை அறிவேன். கிரிக்கெட் என் வாழ்க்கையின் ஒரே ஒரு பகுதிதான். நான் அடையவேண்டிய வேறு இலக்குகளும் உள்ளன. அதை மனதில் வைத்துக்கொண்டு வேறு வாழ்க்கைத்தொழிலைத் தேட இருக்கிறேன். பெரும்பாலும் சட்டத் துறையில் கால்பதிப்பேன் என்று நம்புகிறேன்," என்றார் ஆல்ரவுண்டரான அன்சாரி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!