வடகொரியாவுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள்

வா‌ஷிங்டன்: வடகொரியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர அந்நாட்டின் மீது கடுமையான தடைகளை அமெரிக்கா விதிக்கவுள்ளது. அமெரிக்காவில் செனட் சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களுடன் நடத்தப்பட்ட ஒரு சிறப்புக் கூட்டத்துக்குப் பின், வடகொரியாவுக்கு எதிரான அதிபர் டோனல்ட் டிரம்பின் உத்தி பற்றி அறிவிக்கப்பட்டது. பசிபிக் வட்டாரத்தில் உள்ள அமெரிக்க மூத்த தளபதி ஒருவர் தென்கொரியாவில் நிறுவப் பட்டுள்ள மேம்பட்ட ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பு முறையை தற்காத்துப் பேசியிருந்தார். வடகொரியா எந்த நேரத்திலும் புதிதாக அணு ஆயுத சோதனையை மேற்கொள்ளக்கூடும் என்ற அச்சம் நிலவும் வேளையில் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!