பிரேசில், அர்ஜெண்டினா, மெக்சிகோவுக்கு அபராதம்

பாரிஸ்: உலகக் கிண்ணக் காற் பந்து தகுதிச் சுற்று ஆட்டங்களின் போது ரசிகர்கள் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதற்காகவும் சில விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கா கவும் பிரேசில், அர்ஜெண்டினா, மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு அனைத்துலகக் காற்பந்து சம்மே ளனம் அபராதம் விதித்துள்ளது. பிரேசிலுக்கு 35,000 சுவிஸ் ஃபிராங்க்கும் (S$49,300) அர்ஜெண்டினாவுக்கு 20,000 ஃபிராங்க்கும் மெக்சிகோவுக்கு 10,000 ஃபிராங்க்கும் அபராத மாக விதிக்கப்பட்டன.