இன்று காற்பந்துச் சங்கத் தேர்தல்

சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்திற்கு முதன்முறையாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலின் மூலம் அடுத்த நான்கு ஆண்டு களுக்குக் காற்பந்துச் சங்கத்தை வழிநடத்திச் செல்லும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத் தின் முன்னாள் துணைத் தலை வரும் வழக்கறிஞருமான லிம் கியா தோங் தலைமையில் ‘டீம் எல்கேடி’ அணியும் ஹவ்காங் யுனைடெட் குழுவின் தலைவர் பில் இங் தலைமையில் ‘கேம் சேஞ்சர்ஸ்’ அணியும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றன.

ஒரு தலைவர், ஒரு துணைத் தலைவர், நான்கு உதவி தலைவர் கள், மூன்று மன்ற உறுப்பினர்கள் என ஒன்பது பொறுப்புகளைக் கைப்பற்ற இந்த இரு குழுக்களும் முனைப்புடன் உள்ளன. மேலும் ஆறு மன்ற உறுப்பினர்களுக்குத் தனிநபர்கள் போட்டியிடுகின்றனர். ‘டீம் எல்கேடி’ தரப்பில் துணைத் தலைவர் பதவிக்கு சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவரும் எஸ்டி எஞ்சினியரிங் நிறுவனத்தின் தலைமைச் சந்தையியல் அதிகாரி யுமான பெர்னார்ட் டான் போட்டி யிடுகிறார். எட்வின் தோங், எஸ் தவநேசன், டியோ ஹோக் செங், ரஸாலி சாட் ஆகியோர் உதவித் தலைவர் பதவிக்கான ‘டீம் எல்கேடி’ அணியின் வேட்பாளர் களாகக் களமிறங்குகின்றனர்.

‘கேம் சேஞ்சர்ஸ்’  அணியின் தலைவர் திரு பில் இங்.