சிங்கப்பூர் காற்பந்து சங்கத் தேர்தலில் ‘டீம் எல்கேடி’ வெற்றி

சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் வரலாற்றில் நேற்று முதன்முதலாக தேர்தல் நடைபெற்றது. சங்கத் தின் தலைவராக லிம் கியா தோங் வாகை சூடியிருக்கிறார். 'டீம் எல்கேடி' என்னும் அவரது குழு பில் இங் தலைமையிலான 'டீம் கேம் சேஞ்சர்ஸ்' குழுவை 17 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது. 'ஸ்போர்ட்ஸ் ஹப்'பின் பிளாக் பாக்ஸ் அரங்கத்தில் நடைபெற்ற தேர்தலில் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தைச் சேர்ந்த 44 தரப்பினர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந் தனர். 'டீம் எல்கேடி'க்கு 30 வாக்கு களும் எதிர்த்தரப்புக்கு 13 வாக்கு களும் கிடைத்தன. ஒரு வாக்கு செல்லாதது என அறிவிக்கப்பட் டது. குற்றவியல் வழக்கறிஞரான லிம் கியா தோங், 64, தலைவ ராகவும் பெர்னார்ட் டான் துணைத் தலைவராகவும் தேர்ந் தெடுக்கப்பட்டனர். உதவித் தலைவர்களாக எட்வின் டோங், டியோ ஹாக் செங், எஸ் தவ நேசன், ரஸாலி சாட் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 'டீம் எல்கேடி' நிறுத்திய 15 வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!