பஞ்சாப்பைத் தோற்கடித்த ஹைதராபாத்

மொகாலி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற 33வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதியது. பூவா தலையாவில் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீசியது. ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ஓட்டங்கள் குவித்தது. அந்த அணியில் தவான் (77), வில்லியம்சன் (54), வார்னர் (51) ஆகியோர் அரைசதம் விளாசினர். பின்னர் 208 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில் 3 ஓட்டங் களுக்கு வோரா ஆட்டமிழந்தார். சிறிது நேரம் அதிரடி காட்டிய கப்டில் 11 பந்துகளில் 23 ஓட்டங் கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த களமிறங்கிய மேக்ஸ் வெல் சந்தித்த இரண்டாவது பந் தில் ‘டக் அவுட்’ ஆகி வெளி யேறினார்.

ஹைதராபாத்தின் ‌ஷிகர் தவான் (வலது). படம்: ஏஎஃப்பி