லீக்கின் முதல் பலியாடு

ப. பாலசுப்பிரமணியம்

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் தாக்குப்பிடித்த சண்டர்லேண்ட் குழு, இங்கிலிஷ் காற்பந்தின் இரண்டாம் நிலையான சாம்பியன் ‌ஷிப் லீக்கிற்கு தள்ளப்பட்டுள்ளது. தன் சொந்த அரங்கில் அது 0-1 என்ற கோல் கணக்கில் நேற்று முன்தினம் போர்ன்மத் குழுவிடம் தோல்வி கண்டு இங்கிலிஷ் பிரிமியர் லீக் தரவரிசை யின் அடிமட்டத்தில் நின்றது. சண்டர்லேண்டை லீக்கை விட்டு விரட்டி, அதற்கெதிரான ஒரே கோலை 88வது நிமிடத்தில் போர்ன்மத் குழுவின் ஜோஷ் கிங் போட்டார். லீக்கின் தரவரிசை பட்டியலில் 20வது இடத்தில் இருக்கும் சண்டர்லேண்ட் குழுவிற்கு இன் னும் நான்கு ஆட்டங்கள் எஞ்சி இருந்தாலும் இதுவரை நடந்த ஆட்டங்களில் போதிய புள்ளிகள் பெறாததால் இந்த அவலநிலை. சொந்த அரங்கில் நடந்த கடந்த 9 ஆட்டங்களில் சண்டர் லேண்ட் குழு ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெறவில்லை. மேலும், கடந்த 10 ஆட்டங்களில் அதனால் இரு கோல்களை மட்டுமே புகுத்த முடிந்தது.

சொந்த அரங்கில் போர்ன்மத் குழுவிடம் தோல்வி கண்டு லீக்கிலிருந்து விலகும் ஏமாற்றத்தில் சண்டர்லேண்ட் குழு பயிற்றுவிப்பாளர் டேவிட் மோயஸ். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!