கார் பந்தயம்: போட்டாஸின் முதல் வெற்றி

சோச்சி: ஃபார்முலா1 கார் பந்தயத்தின் 4வது சுற்றான ரஷ்ய கிராண்ட் பிரியில் ஃபின்லாந்து வீரர் வால்டெரி போட்டஸ் வெற்றி பெற்றுள்ளார். 309.745 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை ஃபின்லாந்து வீரர் வலட்டேரி போட்டாஸ் (மெர்சிடிஸ்) 1 மணி 28 நிமிடம் 08.743 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்ததுடன், அதற்குரிய 25 புள்ளிகளைத் தட்டிச் சென்றார். ஃபார்முலா1 பந்தயத்தில் அவர் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். பஹ்ரைன் சுற்றில் முதல் நிலையில் இருந்து பந்த யத்தை துவங்கிய இவர், தற் போது பந்தயத்தை வென்று உள்ளார். அவரைவிட 0.617 வினாடி பின்தங்கிய முன்னாள் வெற்றி யாளர் ஜெர்மனி வீரர் செபஸ் டியன் வெட்டல் (பெராரி அணி) 2வது இடத்தைப் பிடித்தார். பின்லாந்தின் கிமி ரெய்க் கோனன் 3வதாகவும் இங்கிலாந் தின் லுவிஸ் ஹேமில்டன் நான் வதாகவும் வந்தனர். போர்ஸ் இந்தியா அணி வீரர் செர்ஜியோ பெரேஸ் (மெக்சிகோ), ஈஸ்ட்பான் ஒகான் (பிரான்ஸ்) முறையே 6வது, 7வது இடங்களைப் பிடித்தனர்.

எஃப்1 கார் பந்தயத்தில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்த மெர்சிடிஸ் வீரர் வலட்டேரி போட்டாஸ், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் இருந்து வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக்கொண்டார். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!