விளாசிய வார்னர்; வீழ்ந்த கோல்கத்தா

மொகாலி: ஐபிஎல் கிரிக்கெட்டில் பந்துவீச்சால் மற்ற அணிகளை வீழ்த்தி வந்த கோல்கத்தா அணியை, ஹைதராபாத் அணி புரட்டி எடுத்தது. முதலில் பந்தடித்த, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 209 ஓட்டங்களைக் குவித்தது. அதன் அணித் தலைவர் டேவிட் வார்னர் 59 பந்துகளில் 10 பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் 126 ஓட்டங்கள் விளாச சன் ரைசர்ஸ் அணி 209 ஓட்டங்களைக் குவித்தது. இதன் மூலம் கோல்கத்தாவுக்கு எதிராக அதிகபட்ச ஓட்டங்களை எடுத்த அணியாகவும் திகழ்கிறது சன்ரைசர்ஸ். வார்னர் 43 பந்துகளில் சதத்தை எட்டினார். இது ஐபிஎல் கிரிக்கெட்டில் 5வது அதிவேக சதமாகும். வார்னரின் விக்கெட்டை வீழ்த்தும் வாய்ப்பை இரண்டு முறை தவற விட்ட வோக்ஸ் மூன் றாவது வாய்ப்பில் விக்கெட்டைக் கைப்பற்றினார். தொடர்ந்து ஆடிய கோல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

சதமடித்த வெற்றிக் களிப்பை ரசிகர்களோடு பகிர்ந்து கொள்ளும் ஹைதரபாத் அணியின் டேவிட் வார்னர். ஐபிஎல் கிரிக்கெட்டில் ஐந்தாவது அதிவேக சதமாகும் இது. படம்: ஏஎஃப்பி