சிமியோனி: இந்த ஆட்டத்தை நாங்கள் மறக்க வேண்டும்

மட்ரிட்: தனது பரம எதிரியான ரியால் மட்ரிட் குழுவிடம் தோல் வியைச் சந்தித்த ஆட்டம் மறக்க வேண்டிய ஒன்று என்று கூறினார் அட்லெட்டிகோ மட்ரிட் காற்பந்து குழுவின் நிர்வாகி டியேகோ சிமியோனி. சாம்பியன்ஸ் லீக் காற்பந்து தொடரின் அரையிறு-தி ஆட்டத் தின் முதல் சுற்றில் மட்ரிட் குழுக்கள் மோதின. இதில் ரியால் மட்ரிட்டின் நட்சத்திர வீரர் ரொனால்டோ மூன்று கோல்களைப் புகுத்தினார். இதனால், 3=0 என்ற கோல் கணக்கில் ரியால் மட்ரிட் குழு வெற்றி பெற்றது.

ஆட்ட நேரம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய ரியால் குழு, 10வது நிமிடத்தில் முதல் கோலைப் புகுத்தியது. கேஸ்மிரோ கடத்திய அந்தப் பந்தை தலையால் முட்டி கோலாக் கினார் ரொனால்டோ. அதன் பிறகு நீண்ட நேரம் கழித்து, 73வது, 86வது நிமிடத் தில் ரொனால்டோ மேலும் இரண்டு கோல்களைப் புகுத்தினார். இதையடுத்து, தொடர்ந்து இரண்டாவது முறையாக 'ஹாட் ரிக்' கோல் புகுத்தியவர் என்ற பெருமையைப் பெற்றார் அவர். பயர்ன் மியூனிக் குழுவிற்கு எதிரான காலிறதி ஆட்டத்திலும் ரொனால்டோ 'ஹாட்ரிக்' கோல் புகுத்தியது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன்ஸ் லீக் காற்பந்து தொடரின் அரையிறுதி ஆட்டத்தின் முதல் சுற்றில் அட்லெட்டிகோ மட்ரிட் குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோ 'ஹாட்ரிக்' கோல்களைப் புகுத்தினார். இது அவரது இரண்டாவது தொடர் 'ஹட்ரிக்' கோல்களாகும். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!