சாம்பியன்ஸ் லீக்கிற்கு தகுதி பெறும் முனைப்பில் மோதல்

லண்டன்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெறும் முனைப்போடு ஆர்சனல், மான்செஸ்டர் யுனைடெட் குழுக் கள் நாளைய போட்டியில் மோத விருக்கின்றன. கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு, தரவரிசைப் பட்டியலில் ஐந்தாவது, ஆறாவது இடத்தைப் இக்குழுக்கள் பிடித்துள்ளன. எனவே, இரு குழுக்களும் சாம்பியன்ஸ் லீக் வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ளுவதற்கான மூன்று புள்ளிகளைப் பெறுவதற்கு கடுமையாகப் போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, இந்த ஆட்டத் தில் மான்செஸ்டர் யுனைடெட்டின் சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப் போவதாக கூறியுள்ளார் அதன் நிர்வாகி ஜோசே மொரின்யோ. ஏற்கெனவே யூரோப்பா லீக் கிண்ணக் காற்பந்தின் அரையிறுதி முதல் சுற்றில் செல்ட்டா வீகோவை ஒரு கோல் முன்னிலையில் வீழ்த்தியது மேன்யூ.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!