மெஸ்ஸி மீதான தடையை ரத்து செய்த ஃபிஃபா

பியூனஸ் அய்ரஸ்: அர்ஜெண்டினா வீரர் லயனஸ் மெஸ்ஸி (படம்) மீதான தடை நீக்கப்பட்டுள்ளதால், உலகக் கிண்ணக் காற்பந்துத் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் அவர் விளையாடுவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது. சிலிக்கு எதிரான ஆட்டத்தின் போது உதவி நடுவருக்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பயன் படுத்தினார் என்று கூறி மெஸ்ஸிக்கு நான்கு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதனால், பொலிவியாவிற்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி விளையாடமுடியாமல் போனது. அதில் 2-0 என்ற கோல் கணக் கில் அர்ஜெண்டினா தோல்வி அடைந்தது.

இதற்கிடையே, நான்கு போட்டிகளில் விளையாட விதிக் கப்பட்ட தடையை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டின் போது, மெஸ்ஸியின் நடத்தை கண்டனதுக்குரியது என்றாலும் போதுமான ஆதாரங்கள் இல்லா ததால் அவர் மீதான தடையை திரும்பப் பெற்றுக்கொள்வதாக ஃபிஃபா அறிவித்தது. மேலும் அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையும் ரத்து செய்யப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!