அஸ்லான் ஷா ஹாக்கி: 7வது முறையாக வெண்கலப் பதக்கம் வென்றது இந்தியா

ஈப்போ: அஸ்லான் ஷா கிண்ண ஹாக்கி தொடரின் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் இந்தியா 4=0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி யது. முற்பாதி ஆட்டத்தில், தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பு களைச் சரியாகப் பயன்படுத்தி கொண்ட இந்தியாவின் நட்சத்திர வீரர் ரூபிந்தர் சிங் பால் இரண்டு கோல்களைப் புகுத்தினார். பிற்பாதி ஆட்டத்தின்போது இந்தியாவின் சில கோல் போடும் முயற்சிகளை தனது தடுப்பாட்டத் தால் நியூசிலாந்து முறியடித்தது. ஆனாலும் சர்தார், மன்பிரீத் சிங் கடத்திய பந்தை கோலாக மாற்றினார் சுனில்.

தொடர்ந்து ஆட்டம் முடிய சில வினாடிகளே இருந்தபோது, தல் வீந்தர் சிங் இன்னுமொரு கோலைப் புகுத்த இந்தியா 4=0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றது. அஸ்லான் ஷா கிண்ண ஹாக்கியில் இந்தியா வென்றுள்ள 7வது வெண்கலப் பதக்கம் இது. முன்னதாக நேற்று முன்தினம் நடந்த கடைசி லீக் போட்டியில் இந்திய அணி 0=1 என்ற கோல் கணக்கில் மலேசியாவிடம் தோற்று இறுதிப் போட்டி வாய்ப்பை நழுவவிட்டது. தலா 7 புள்ளிகளைப் பெற்ற இந்தியா, நியூசிலாந்து அணிகள் 3வது இடத்துக்கான ஆட்டத்தில் மோதின. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் தலா 10 புள்ளிகளுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!