கனவு இன்னும் சிதைந்துவிடவில்லை - டோட்டன்ஹம்

லண்டன்: பிரிமியர் லீக் காற்பந்தில் வெஸ்ட் ஹேம் குழுவிடம் அடைந்த தோல்வியால் பட்டத்தை வெல்வதற்கான கனவு இன்னும் சிதைந்து விடவில்லை என்று கூறியுள்ளார் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவின் நிர்வாகி பொக்கெட்டினோ. பிரிமியர் லீக் பட்டம் வெல் வதில், செல்சிக்கும் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஸ்பர்ஸ் குழுவிற்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், வெஸ்ட் ஹேம் குழுவிடம் 1=0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது ஸ்பர்ஸ் குழுவிற்கு பெரும் பின் னடைவாக அமைந்துள்ளது. இந்த தோல்வியால் ஸ்பர்ஸ் தொடர்ந்து 4 புள்ளிகள் பின்தங்கி உள்ளது. "எங்களது கனவு இன்னும் சிதைந்துவிடவில்லை. பட்டத்தை வெல்வதற்கான போட்டி இன்னும் முடிந்துவிடவில்லை. "ஆனால், செல்சியை எட்டிப் பிடிப்பது என்பது மேலும் கடின மாகிவிட்டது. "புள்ளி இடைவெளியை குறைப்பதற்கான வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டோம். "இன்னும் மூன்று ஆட்டங் களில் இருந்து ஏழு புள்ளிகள் எடுக்க வேண்டும் என்பது மிகவும் கடினமாக ஒன்று. ஆனாலும் நாங்கள் முயற்சி செய் வோம்," என்றார் ஸ்பர்ஸ் நிர்வாகி பொக்கெட்டினோ.

டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவின் பிரிமியர் லீக் பட்டம் வெல்லும் கனவை குலைக்கும் வகையில் அமைந்த வெஸ்ட் ஹேமின் வெற்றி கோல். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!