தேசிய அரங்கத்தில் திரண்ட 25,000 காற்பந்து ரசிகர்கள்

சிலாங்கூர் சுல்தான் கிண்ணக் காற்பந்து போட்டியில் அண்டை மலேசியாவுடன் சிங்கப்பூர் மோதிய காற்பந்து விளையாட்டை 25,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ரசித்தனர். தேசிய அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூர் வென்றது. 2001 ஆண்டில் காட்சிப் போட்டி தொடங்கியதிலிருந்து 7வது முறையாக சிங்கப்பூர் கிண்ணத்தை வென்றுள்ளது.