கிறிஸ்டல் பேலசை பந்தாடிய மேன்சிட்டி

பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் கிறிஸ்டல் பேலஸ் குழுவை 5-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த மான்செஸ்டர் சிட்டி குழு, புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடத்தைக் கைப்பற்றும் தனது பிடியை மேலும் வலுவாக்கியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் கோல் வித்தியாசத்தில் லிவர் பூலைப் பின்னுக்குத் தள்ளிய மான்செஸ்டர் சிட்டி 3வது இடத்துக்கும் முன்னேறியிருக் கிறது. ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே சிட்டியின் டேவிட் சில்வா முதல் கோலைப் புகுத்தினார்.

இது, இந்தப் பருவத்தில் மிக விரைவான நேரத்தில் சிட்டி போட்ட கோலாகும். முதல் கோலைப் போட்டு இருந்தாலும் ஆட்டத்தின் முற் பாதியில் மான்செஸ்டர் சிட்டி வேறு எந்த கோலையும் போட முடியவில்லை. ஒரு கட்டத்தில் கிறிஸ்டல் பேலசின் கிறிஸ்டியன் பென் டெக்கே தனது தலையால் முட்டி முதல் கோல் போட முயற்சி செய்தார். ஆனால் கோல்காப்பாளர் வில்லி கேபா லேரோ தடுத்துவிட்டார். அதன் பிறகு கிறிஸ்டல் பேலஸ் சோபிக்கவில்லை. பிற்பாதி ஆட்டத்தில் சிட்டி யின் ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது.

அதன் காரணமாக, அணித் தலைவர் வின்சென்ட் கோம்பெனி இரண்டாவது கோலை புகுத்தினார். அடுத்ததாக கெவின் டி பிரையன் 'ஃபிரி கிக்' வாய்ப்பு மூலம் 3வது கோலை கணக் கில் சேர்த்தார். நான்காவது 5வது கோலை முறையே ரஹிம் ஸ்டர்லிங்கும் நிக்கோலஸ் ஓடாமெண்டியும் புகுத்தி சிட்டியின் கோல் எண் ணிக்கையை 5க்கு கொண்டு சென்றனர்.

கிறிஸ்டல் பேலசுக்கு எதிராக ஆட்டத்தின் 2வது நிமிடத்திலேயே முதல் கோலை போட்டு துள்ளிக் குதிக்கும் மான்செஸ்டர் சிட்டியின் டேவிட் சில்வா. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!