மும்பை அணியை வீழ்த்திய ஹைதராபாத்

ஹைதராபாத்: இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணியை சன்ரைசர்ஸ் ஹைத ராபாத் அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித் துள்ளது. மும்பை அணி முதலில் பந்தடித்தது. சிம்மன்ஸ் ஓர் ஓட்டம் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். பார்தீவ் பட்டேல் 23 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். மூன்றாவது வீரராகக் களம் இறங்கிய அணித் தலைவர் ரோகித் சர்மா மட்டும் நிலைத்து நின்று விளையாடினார். அவரும் 67 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ஓட்டங்கள் எடுத்தது. இதை அடுத்து, 139 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக் குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி 18.2 ஓவர்களில் மூன்று விக்கெட்கள் இழப்பிற்கு 140 ஓட்டங்களைக் குவித்து வெற்றி பெற்றது. ‌ஷிகர் தவான் ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களையும் ஹென்ரிக்ஸ் 44 ஓட்டங்களையும் குவித்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!