லீக் பட்டத்தை நெருங்கியது செல்சி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டிக்கான பட்டத்தை செல்சி நெருங்கி உள்ளது. இன்னும் மூன்று ஆட்டங்கள் எஞ்சியிருக்கும் நிலையில் மூன்று புள்ளிகள் எடுத்தால் போதும், லீக் பட்டம் செல்சிக்குச் சொந்தமாகிவிடும். நாளை மறுநாள் வெஸ்ட் பிரோம் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றால் செல்சி லீக் பட்டத்தைக் கைப் பற்றும். அப்படியே அந்த ஆட்டத் தில் மூன்று புள்ளிகளைப் பெற செல்சி தவறினாலும் வாட்ஃபர்ட், சண்டர்லாந்து ஆகிய குழுக் களுக்கு எதிரான ஆட்டங்களில் மூன்று புள்ளிகளைப் பெற அதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. எனவே, இப்பருவத்துக்கான லீக் பட்டத்தை செல்சி வெல்வது கிட்டத்தட்ட உறுதி என்று நம்பப் படுகிறது. இதற்கிடையே, லீக் பட்டியலில் 19வது இடத்தில் இருக்கும் மிடல்ஸ்பரோ இரண்டாம் நிலை லீக் போட்டிக்குத் தள்ளப் பட்டுள்ளது. நேற்று முன்தினம் செல்சிக்கு எதிரான ஆட்டத்தில் மிடல்ஸ்பரோ 3-0 எனும் கோல் கணக்கில் தோல்வியைத் தழுவி பிரிமியர் லீக் தகுதியை இழந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!