பஞ்சாப் விடாப்பிடி

சண்டிகர்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 'பிளே ஆஃப்' சுற்று வாய்ப்பை இன்னும் இழந்து விடாமல் தன்னால் அச்சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நம்பிக் கையுடன் விளையாடி வருகிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. பட்டியலின் இரண்டாம் இடத்தில் இருக்கும் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை நேற்று முன்தினம் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோற்கடித்தது. கோல்கத்தா அணியின் தொடக்க வீரர் கிறிஸ் லின் 84 ஓட்டங்களை விளாசியபோதும் இறுதிக் கட்டத்தில் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து, ஓட் டங்களை எடுக்கத் தடுமாறியதால் அவ்வணியின் பிடியில் இருந்து வெற்றி நழுவியது. முதலில் பந்தடித்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 167 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக அணித்தலைவர் மேக்ஸ்வெல் 44 ஓட்டங்களைச் சேர்த்தார்.

கிறிஸ் லின் (இடது) இறுதி வரை களத்திலிருந்தால் கோல்கத்தா அணி வெல்வது நிச்சயம் எனக் கருதப்பட்ட நிலையில் அவரை 'ரன் அவுட்' முறையில் வெளியேற்றி பஞ்சாப் அணிக்கு நிம்மதி அளித்தார் விக்கெட் காப்பாளர் ரித்திமான் சாகா. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!