இறுதிக்குள் நுழைந்தது யுவென்டஸ்

டூரின்: மூன்று ஆண்டுகளில் இரண்டாவது முறையாக ஐரோப் பிய சாம்பியன்ஸ் லீக்கின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது இத் தாலியின் யுவென்டஸ் காற்பந்துக் குழு. சொந்த விளையாட்டரங்கில் நேற்று அதிகாலை நடந்த அரை இறுதி இரண்டாம் சுற்று ஆட் டத்தில் யுவென்டஸ் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்சின் மொனாக்கோ குழுவை வீழ்த்தி யது. முதல் ஆட்டத்திலும் 2-=0 என்ற கணக்கில் வென்றிருந்ததால் ஒட்டுமொத்தமாக 4-1 என முன்னிலை பெற்ற யுவென்டஸ் இறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெற்றது.

குரோவே‌ஷியாவின் மாரியோ மாண்ட்ஸ`கிச் 33வது நிமிடத்தில் கோலடித்து முன்னிலை பெற்றுத் தந்தார். முற்பாதி ஆட்டம் முடிய இரண்டு நிமிடங்களே இருந்த போது அம்முன்னிலையை இரட்டிப் பாக்கினார் இந்தப் பருவத்தின் தொடக்கத்தில் பார்சிலோனாவில் இருந்து யுவென்டசுக்கு இடம் மாறிய பிரேசில் ஆட்டக்காரர் டேனி ஆல்வெஸ். ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் பிரான்சின் இளம் நட்சத்திரம் கிலியன் இம்பாப்பே அடித்த கோலால் மொனாக்கோவிற்கு எந்தப் பலனும் கிட்டவில்லை.

மொனாக்கோவிற்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் யுவென்டஸ் குழுவின் இரண்டாவது கோலை அடித்த டேனி ஆல்வெஸை (நடுவில்) பாராட்டும் அணித்தலைவர் ஜியன்லுய்கி புஃபான் (இடது), கிளாடியோ மர்க்கிசியோ. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!