ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி; டெல்லி அணி ஆச்சரிய வெற்றி

கான்பூர்: எட்டுவதற்குக் கடின மான இலக்கை நிர்ணயித்தாலும் வெற்றிபெற முடியாமல் தடுமாறி வருகிறது சுரேஷ் ரெய்னா தலை மையிலான குஜராத் லயன்ஸ் அணி. பத்தாவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன் தினம் நடந்த ஆட்டத்தில் குஜராத் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியிடம் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. முதலில் பந்தடித்த குஜராத் அணிக்கு இஷான் கிஷன் (34), தினேஷ் கார்த்திக் (40), ஆரோன் ஃபின்ச் (69) ஆகியோர் கை கொடுக்க, அந்த அணி 20 ஓவர் களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 195 ஓட்டங்களைக் குவித்தது. இலக்கை விரட்டிய டெல்லி அணி 12 ஓட்டங்களுக்கு ஆறு விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. ஆயினும், ஏழாவது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் ஐயரும் பேட் கம்மின்சும் இணைந்து 61 ஓட்டங்களைச் சேர்த்து, டெல்லி அணியின் வெற் றிக்கு வித்திட்டனர். அபாரமாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் சதமடிக்க நல்ல வாய்ப்புக் கிடைத்தும் அதைக் கோட்டை விட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!