ஐந்தாம் இடத்திற்கு உயர்ந்த ஆர்சனல்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து வரலாற்றில் அண்மைய ஆண்டு களாக இல்லாத வகையில் பெரும் சரிவைச் சந்தித்து வந்த ஆர்சனல் குழு, மீண்டும் மேலேறத் தொடங்கியுள்ளது. 2000-01 பருவம் முதல் தொடர்ந்து பட்டியலின் முதல் நான்கு இடங்களுக்குள் வந்து சாம்பியன்ஸ் லீக் போட்டிக்குத் தகுதி பெற்று வந்துள்ளது ஆர்சனல். ஆயினும், இந்தப் பருவத்தில் ஆர்சனலின் செயல்பாடு சரியாக அமையாததால் அது ஆறாம் இடத்திற்குக் கீழிறங்கியது. ;

இதனால் தொடர்ந்து 18வது முறை யாக அக்குழு சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தகுதி பெற முடியாத நிலை உருவானது. இந்த நிலையில், சௌத்ஹேம்டன் குழுவிற்கு எதிராக நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதன் மூலம் அக் குழு ஐந்தாம் நிலைக்கு முன்னேறியது. இன்னும் மூன்று ஆட்டங்கள் எஞ்சி உள்ள நிலையில், ஸ்டோக் சிட்டி, சண்டர் லேண்ட், எவர்ட்டன் எனத் தன்னைவிட வலிமை குறைந்த குழுக்களையே எதிர் கொள்வதால் அம்மூன்றிலும் ஆர்சனல் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராபின் வேன் பெர்சிக்குப் பிறகு இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் ஒரு பருவத்தில் ஆர்சனல் குழுவிற்காக 20 கோல்களை அடித்து, குழுவில் தமது முக்கியத்துவத்தை நிரூபித்த அலெக்சிஸ் சான்செஸ். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!