இலக்கை நெருங்கும் யுனைடெட்

மான்செஸ்டர்: 'இங்கிலிஷ் பிரி மியர் லீக்கில் முதல் நான்கு இடங்களுக்குள் வருவது முக்கிய மல்ல, யூரோப்பா லீக்கை வெல் வதே இலக்கு' என்று கூறி வருகிறார் மான்செஸ்டர் யுனை டெட் காற்பந்துக் குழு நிர்வாகி ஜோசே மொரின்யோ. அதற்கேற்ப, யுனைடெட் குழு வும் யூரோப்பா லீக் கிண்ணத்தை நெருங்கி வருகிறது. ஸ்பெயினின் செல்ட்டா வீகோ குழுவிற்கெதிராக நேற்று நடந்த அரையிறுதிச் சுற்றின் இரண்டாம் ஆட்டத்தில் யுனைடெட் 1-1 எனச் சமநிலை கண்டது. முதல் ஆட்டத்தில் 1-0 என வென்றிருந்த தால் 2-1 என முன்னிலை பெற்ற யுனைடெட், இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. யுனைடெட் குழுவிற்குச் சொந் தமான ஓல்ட் டிராஃபர்ட் அரங்கில் நடந்த இந்த ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் கோலடித்து ரசிகர் களை மகிழ்ச்சிக்குள்ளாக்கினார் மருவான் ஃபெலைனி.

செல்ட்டா வீகோ குழுவிற்கெதிரான யூரோப்பா லீக் அரையிறுதியில் கோலடித்த ஃபெலைனியை (வலது) பாராட்டுகிறார் சக மான்செஸ்டர் யுனைடெட் குழு ஆட்டக்காரர் ஜெஸி லிங்கார்ட். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!