லீக் பட்டம் செல்சி வசம்

வெஸ்ட் ப்ரோம்விச்: இந்த ஆட்டத்தில் வெற்றி பெற் றால் லீக் கிண்ணம் தனக்குத்தான் என்- பதை அறிந்து வெஸ்ட் ப்ரோம்விச் குழுவுக்கு எதிராக நேற்று பின்- னிரவு களம் இறங்கியது செல்சி குழு. ஆனால் அக்குழு வெற்றி- யைச் சுவைப்ப தற்கு 82 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டியிருந்- தது. சற்று பதற்றத் துடன் காணப்- பட்ட செல்சி தடு மாறும் என அதன் சொந்த ரசிகர் களே எண்- ணிக் கொண்டிருந்த வேளை யில் நிலைமையை மாற்றி னார் செல்சி ஆட்டக்காரர் பட்‌ஷு யாயி. மாற்று ஆட்டக்காரராக வந்த பட்‌ஷுயாயி போட்ட ஆட்டத்தின் ஒரே கோல், செல்சிக்கு 1=0 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி- யைத் தேடித் தந்தது. அதோடு லீக் கிண்ணத்தையும் செல்சி கைப்பற்றுவது உறுதியானது. இன்னும் இரண்டு ஆட்டங்கள் எஞ்சியிருக்கும்போதே லீக் கிண்ணத்தை வெற்றி பெறுவதை உறுதிப்படுத்திக் கொண்டது செல்சி. ஏனெனில் பட்டியலில் இரண் டாம் நிலையில் உள்ள டோட் டன்ஹம் ஹாட்ஸ்பர் குழு எஞ் சிய மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றாலும் புள்ளிகள் வித்தி யாசத்தில் செல்சியை எட்டிப் பிடிக்க முடியாது. செல்சி ஸ்பர்ஸ் குழுவைவிட 10 புள்ளிகள் வித்தி- யாசத்தில் தற்போது உள்ளது.

வெஸ்ட் ப்ரோம் குழுவுக்கு எதிராக நேற்று பின்னிரவு இங்கிலாந்தின் வெஸ்ட் ப்ரோம் விச் நகரில் வெஸ்ட் ப்ரோம் விச் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் செல்சி ஆட்டக்காரர் பட்‌ஷுயாயி (வலது) போட்ட ஒரே கோலில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. அந்த வெற்றியை செல்சி அணியினருடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார் அக்குழுவின் பயிற்றுவிப்பாளர் அண்டோனியோ கோன்ட்டே (நடுவில்). படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!