சாதனையுடன் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி

போர்ட் செப்ஸ்ட்ரூம்: தென்னாப் பிரிக்கா, ஸிம்பாப்வே, இந்தியா, அயர்லாந்து ஆகிய நான்கு நாடு களுக்கு இடையில் மகளிருக் கான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியா=அயர்லாந்து அணிகள் மோதின. முதலில் பந்தடித்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 358 ஓட்டங்கள் குவித்தது. தொடக்க விக்கெட்டுக்கு தீப்தி ஷர்மா=பூனம் ராவுத் ஜோடி 320 ஓட்டங்கள் குவித்து உலகச் சாதனை படைத்தது. பெண்கள் கிரிக்கெட் போட்டி யில் எந்தவொரு விக்கெட்டுக்கும் இதற்கு முன்பு 300 ஓட்டங்கள் எடுக்கப்பட்டதே இல்லை. தீப்தி ஷர்மா 160 பந்துகளில் 27 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 188 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

160 பந்துகளில் 188 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்த இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா. படம்: இணையம்