செல்சியிடம் மற்ற குழுக்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பட்டத்தை செல்சி குழு வென்றுள்ள நிலையில், பட்டி யலில் அடுத்த ஐந்து இடங்களில் உள்ள மற்ற குழுக்கள் அடுத்த பருவத்தில் பட்டத்தை வெல்ல வேண்டும் என்றால் தங்களை எப்படி மேம்படுத்திக்கொள்வது என்பது பற்றி ஆராய வேண்டியது அவசியம் என்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டு உள்ளது. டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் செல்சிக்கு கடும் போட்டியைக் கொடுத்து வந்த டோட்டன்ஹம் குழு, கடந்த இரண்டு பருவங் களாக -சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் லீக் பட்டத்தை வெல்ல முடியவில்லை. இதற்கு காரணமாக சொல்லப் படுவது டோட்டன்ஹம் ஹேரி கேன், டோபி அல்டர்வீல்ட் ஆகிய இருவரை மட்டுமே பெரும்பாலும் நம்பியிருந்தது. அவர்கள் காயம் காரணமாக விளையாட முடியாத நிலையில், சில ஆட்டங்களில் டோட்டன்ஹம் தோல்வியைத் தழுவியது. பட்டத்தை வெல்ல வேண்டும் என்றால் அக்குழுவின் அனைத்து ஆட்டக்காரர்களும் சிறப்பாக விளையாடவேண்டியது அவசியம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!