கிரிக்கெட் சூதாட்ட விசாரணையைப் புறக்கணித்த வீரர்

கராச்சி: முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் காலித் லத்திஃப் (படம்) தன் மீதான சூதாட்ட வழக்கு விசாரணையைப் புறக் கணித்தார். தன்னிடம் நடத்தப்பட்ட விசார ணையின் ஒலிப் பிரதியை தீர்ப் பாயம் தர மறுத்த நிலையில் அவர் இவ்வாறு செய்துள்ளார். ஆட்டத்தின் முடிவை முன் கூட்டியே நிர்ணயிப்பதற்காக சூதாட்ட தரகரிடம் பணம் வாங்கியதாகவும் சக வீரர்களையும் அவ்வாறு செய்ய தூண்டியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஐக்கிய அரபு நாடுகளில் நடந்த பாகிஸ்தான் பிரிமியர் லீக் ஆட்டங்களின்போது எழுந்த குற்றச்சாட்டை மூன்று பேர் கொண்ட தீர்ப்பாயக் குழு விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக, கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊழலுக்கு எதிரான தீர்ப்பாயம் லத்திஃப்பிடம் விசாரணை மேற்கொண்டது.