தோல்வி குறித்து வெங்கர்

லண்டன்: ஆர்சனல் அடுத்த பருவ சாம்பியன்ஸ் லீக் காற் பந்திற்கு தகுதி பெற முடியாமல் போனதற்கு, குழுவில் தனது எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற நிலை ஒரு காரணம் என்று கூறியுள்ளார் அதன் நிர்வாகி வெங்கர். நேற்று முன்தினம் முடிவடைந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டி யில் எவர்ட்டனை 3=1 என வீழ்த்தினாலும் பட்டியலில் 5வது இடத்தை மட்டுமே ஆர்சனலால் பிடிக்க முடிந்தது. எனவே, கடந்த 20 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது ஆர்சனல்.

“கடந்த ஐனவரி மாதம் முதல் நாங்கள் பல்வேறு காரணங்களால், இக்கட்டான சூழ்நிலையில் விளை யாடி வருகிறோம். “குழுவில் என்னுடைய எதிர் காலம் கேள்விக்குறியாக உள்ள தால், அது என்னை மட்டுமல்ல, குழுவையும் பாதித்துவிட்டது. “ஆனால், என்னுடைய, கடப் பாடு, நிபுணத்துவ திறம் ஆகிய வற்றில் எந்த சந்தேகமும் இல்லை. “வரும் 27ஆம் தேதி நடை பெறவுள்ள எஃப்ஏ கிண்ணப் போட்டிக்குப் பிறகு குழுவில் எனது எதிர்காலம் பற்றி முடிவு செய்யப்படும்,” என்று வெங்கர் கூறினார். மற்றோர் ஆட்டத்தில் மிடல்ஸ்பரோவை 3-0 என வீழ்த்திய லிவர்பூல் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தது.