வெற்றிக் கொண்டாட்டத்தில் செல்சி வீரர்கள்

வெஸ்ட் பிரோம்விச் குழுவை 1=0 என வீழ்த்தியபோதே லீக் பட்டம் செல்சிக்குதான் என்பது உறுதி யாகிவிட்டது. இந்நிலையில், கடைசி ஆட்டத் தில் சண்டர்லேண்ட் குழுவை 5=1 என வீழ்த்தியதன் மூலம் ஒரே பருவத்தில் 30 வெற்றிகளைப் பெற்ற முதல் குழு என்ற பெருமை யோடு லீக் பட்டம் வென்ற மகிழ்ச் சியைக் கொண்டாடியது செல்சி. சிறந்த நிர்வாகியாக செல்சி யின் கோண்டேவும் சிறந்த விளையாட்டாளராக கோலோ கான்டேயும் தேர்வு பெற்றனர். 29 கோல்களைப் புகுத்திய ஸ்பர்ஸ் வீரர் ஹேரி கேன் தங்கக் காலணி விருது பெற்றார். 6வது முறையாக பிரிமியர் லீக் கிண்ணத்தை வென்ற மகிழ்ச் சியைக் கொண்டாடும் செல்சி வீரர்கள். படம்: ஏஎஃப்பி