‘கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்த வேண்டும்’

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அண்மையில் வீரர்களுக்கான சம்பளத்தை உயர்த்தியுள்ள- தாக அறிவித்தது. அதன்படி ‘ஏ’ கிரேடு வீரர்களின் சம்ப- ளம் ரூ.2 கோடியாக உயர்த்தப்பட்டது. ‘ஏ’ கிரேடில் விராத் கோஹ்லி, டோனி, அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்று இருந்தனர். இந்த நிலையில் வீரர்களுக்கான சம்பளம் போதாது என்றும் அதிகரிக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது. இதற்கிடையே இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி வீரர்களின் சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.