உலக கிரிக்கெட் அரங்கில் சிங்கப்பூர் வீரர்கள்

சிங்கப்பூர் கிரிக்கெட் வீரர்கள் உலகக் கிரிக்கெட் லீக் டிவிசன் 3ல் அடியெடுத்து வைத்துள்ளனர். அவர்கள் நேற்று உகாண்டா நாட்- டின் காம்பாலாவில் நமது அண்டை நாடான மலேசியாவுடன் பொருதினர். சிங்கப்பூர் அணிக்கும் மலேசியா அணிக்கும் கடந்த வியாழக்கிழமை நைரோபியில் நட்புமுறை ஆட்டம் நடைபெற்றது. அதில் சிங்கப்பூர் அணி தோல்வி- யுற்றாலும் பந்து வீச்சு, பந்தடிப்பு என இரண்டிலும் தங்கள் திற- மையை வெளிப் படுத்தத் தவற- வில்லை. கடந்த ஆண்டு நவம் பரில் நடந்த சவுடாரா கிண்ணப் போட்டியில் மலேசியாவை சிங்கப்- பூர் தோற் கடித்தது. "நாங்கள் நுணுக்க மாகப் பந்தடிப்பதில் சற்று சிரமத்தை எதிர்நோக்கி னோம். ஆனால் இப்போது அந்தச் சிரமத்தையெல்- லாம் தாண்டி வந்துவிட்டோம் என்றே நம்புகி றேன்," என்றார் சிங்கப்பூர் அணி யின் கேப்டன் சூரிய வன்‌ஷி.

கடந்த வாரம் புதன் கிழமை நடந்த ஆட்டம் ஒன்றில் கென்யாவின் சிறந்த ஆட்டக்- காரர்களுடன் மோதி தோல்வி கண்டது. அதேபோல் கடந்த சனிக்கிழமை நடந்த இன்னொரு ஆட்டத்தில் கென்யாவை ஓர் ஓட்டம் வித்தியாசத்தில் சிங்கப்- பூர் அணி தோற்கடித்தது. "பந்தடிப்பு, பந்துவீச்சு இரண்- டிலும் எங்கள் அணி வலுவாக உள்ளது. மலேசிய அணியுடன் மோதி வெற்றி பெறுவதற்குத் தயார் நிலையில் களமிறங்கியுள்- ளோம்," என்றார் சிங்கப்பூர் அணியின் பயிற்றுவிப்பாளர் சரிகா பிரசாத். இன்று: சிங்கப்பூர் அணி உகாண்டா அணியுடனும் மலேசிய அணி, அமெரிக் காவுடனும் மோத வுள்ளனர். வெள்ளிக்கிழமை: சிங் கப்- பூர்-அமெரிக்கா, உகாண்டா -ஓமன், கனடா-மலேசியா. சனிக்கிழமை: உகாண்டா- மலேசியா, கனடா - அமெரிக்கா, சிங்கப்பூர்- ஓமன். திங்கட்கிழமை: மலேசியா- ஓமன், கனடா- சிங்கப்பூர், உகாண்டா - அமெரிக்கா. மே 30 செவ்வாய்க்கிழமை இறுதி ஆட்டம் நடைபெறும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!