சாதித்து விட்டோம்: ரோகித் சர்மா

ஹைதராபாத்: பத்தாவது ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஹைதராபாத்தில் நடந்த திரில்லிங்கான இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஓர் ஓட்டம் வித்தியாசத்தில் புனே சூப்- பர் ஜெயின்ட்டை வீழ்த்தி, மூன்- றாவது முறையாக வெற்றியாளர் பட்டத்தைத் தட்டிச் சென்றது. மும்பை இந்தியன்ஸ் அணி 3வது முறையாக ஐபிஎல் கிண்- ணத்தைக் கைப்பற்றியது. இதற்கு 2013 மற்றும் 2015ஆம் ஆண்டு- களில் வெற்றியாளர் பட்டம் பெற்று இருந்தது. ஐபிஎல் கிண்ணத்தை 3 முறை வென்ற முதல் அணி என்ற சாதனையை மும்பை பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ், கோல் கத்தா நைட் ரைடர்ஸ் தலா இரண்டு தடவை வென்று இருந்தன. வெற்றியாளர் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரூ.15 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. மயிரிழையில் ஐபிஎல் கிண்ணத்தை இழந்து 2வது இடத்தைப் பிடித்த ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட் அணிக்கு ரூ.10 கோடி பரிசாக வழங்கப்பட்டது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சொந்தக்காரரான ரீட்டா அம்பானி (இடமிருந்து 2வது), முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் (இடது) ஆகியோருடன் ஐபிஎல் கிண்ணத்தை 3வது முறையாக வென்ற மும்பை இந்தியன்ஸ் வீரர்கள். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!