100 சதங்கள் அடித்து குமார் சங்ககரா சாதனை

இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த பந்தடிப்பாளருமாகத் திகழ்ந்தவர் குமார் சங்ககரா. இவர் கடந்த 2015=ம் ஆண்டு அனைத்துலக கிரிக் கெட்டில் இருந்து விலகினார். ஆனால் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி போட்டியில் மட்டும் விளையாடி வருகி றார். சுர்ரே அணிக்காக விளையாடி வரும் சங்ககரா, நேற்று யார்க்‌ஷைர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடி னார். இதில் 121 பந்துகளைச் சந்தித்து சதம் அடித்தார். இந்தச் சதம் மூலம் ஒருநாள் போட்டிகளில் (அனைத்துலகம் சதங்கள் உள்பட) 39 சதங்கள் அடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகள் உள்பட முதல்தர போட்டிகளில் 61 சதங்­கள் அடித்துள்ளார். இதன்மூலம் தனது கிரிக்கெட் வரலாற்றில் 100 சதங்கள் அடித்துச் சாதனைப் படைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக ஐந்து சதங்கள் அடித்துச் சாதனைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.