8 குழுக்கள் பங்கேற்கும் ஃபிஃபா கொன்ஃபெடரேஷன்ஸ் கிண்ண காற்பந்துப் போட்டிகள்

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்: இவ்வாண் டின் ஃபிஃபா கொன்ஃ பெடரே ஷன்ஸ் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை ஏற்று நடத்தும் ரஷ்யா, அதன் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்துக் குழுவை வெற்றி கண்டு உற்சாகத்துடன் போட்டி யைத் தொடங்கி உள்ளது. அடுத்த ஆண்டு உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிகளின் இறுதிச் சுற்றையும் ஏற்று நடத்த விருக்கும் ரஷ்யாவின் இந்த ஆட்டத்துக்கு முன், ஃபிஃபா எனப்படும் அனைத்துலக காற்பந் துச் சம்மேளனத்தின் தலைவர் திரு ஜியானி இன்ஃபட்டினோவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் உரையாற்றினார்கள்.

ஆட்டத்தில் 31வது நிமிடத்தில் ரஷ்யாவின் டெனிஸ் குளுஷகோவ் நியூசிலாந்து கோல் காப்பாளர் ஸ்டெஃபான் மரினோவிச்சைத் தாண்டி பந்தை கோல் வலையை நோக்கி உதைத்தார். மெதுவாகச் சென்ற பந்தை வெளியே தட்டிவிடலாம் என்று வேகமாகச் சென்ற நியூசிலாந்தின் தற்காப்பு ஆட்டக்காரர்கள் முயல, பந்து நியூசிலாந்தின் மைக்கல் மொக்சலின் காலில் பட்டு வலைக் குள் புகுந்தது. அதன் பின்னர் ரஷ்யா மேற்கொண்ட பல கோல் போடும் முயற்சிகளை நியூசிலாந்து கோல் காப்பாளர் மரினோவிச் அற்புதமாகத் தடுத்து நிறுத்தினார்.

ரஷ்யா, தான் ஏற்று நடத்தும் இவ்வாண்டின் ஃபிஃபா கொன்ஃபெடரேஷன்ஸ் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து குழுவுக்கு எதிரான இரண்டாவது கோலை போட்டார் ரஷ்யக் குழுவின் ஃபெடோர் ஸ்மோலோவ் (இடக்கோடி). படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இந்திய அணியும் கிரிக்கெட்டில் ஆட்சி செலுத்தும் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் சகாப்தம் பிரையன் லாரா கணித்திருக்கிறார். படம்: ஏஎப்பி

19 Oct 2019

லாரா கணிப்பு: கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும்

அரை சதம் அடித்த சிங்கப்பூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுரேந்திரன் சந்திரமோகன். படம்: ஐசிசி

19 Oct 2019

2019 டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தகுதிச் சுற்று: சிங்கப்பூர் பேரெழுச்சி