சர்ஃபராஸ்: மீண்டும் பாகிஸ்தானுக்குக் கிரிக்கெட்டைக் கொண்டு வாருங்கள்

இந்த வெற்றிக்குப் பிறகாவது மீண்டும் பாகிஸ்தானுக்குக் கிரிக்கெட்டைக் கொண்டு வரும்படி பாகிஸ்தான் அணித் தலைவர் சர்ஃபராஸ் அகமது (படம்) கிரிக்கெட் உலகிற்கு வேண்டு கோள் விடுத்துள்ளார். “இது ஒருநாள்.. இருநாள் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய வெற்றி அல்ல. பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் நீண்ட நெடிய நாள்களுக்கு இந்த வெற்றி நினைவில் நிற்கவேண்டிய ஒன்று. “நீண்ட நாள்களாக துபாயைச் சொந்த கிரவுண்டாகக் கொண்டு விளையாடி வருகிறோம்.

இப்போது நாங்கள் வெற்றியாளர்கள். இந்த வெற்றி பாகிஸ்தான் கிரிக் கெட்டுக்குப் பெரும் உற்சாகத்தைக் கொடுக்கும். “இனியாவது மற்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு வந்து எங்களுடன் கிரிக்கெட் விளையாட வேண்டும்,” என செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சர்ஃபராஸ் உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார். அண்மையில் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் ஒரு ‘பாப் இசை நிகழ்ச்சியிலும் பின்பு லண்டன் பாலத்திலும் பயங்கர வாதத் தாக்குதல்கள் அண்மையில் நடந்தபோதும் கிரிக்கெட் ஆட்டங் கள் தொடர்ந்து நடைபெற்றன.

பாகிஸ்தான் அணித் தலைவர் சர்ஃபராஸ் அகமது