முதல் போட்டியில் சதம்

வெற்றியாளர் கிண்ணப் போட்டியில்தான் 27 வயது ஃபக்கார் ஜமான் (படத்தில் வெற்றியாளர் கிண்ணத்துடன்) பாகிஸ்தானுக்காக தனது முதல் அனைத்துலக ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தை விளையாடினார். அவருடைய முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் ஜூன் 7ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுடன் தொடங் கியது. தொடர்ந்து இரு ஆட்டங்களில் அரை சதம் கடந்ததால் இறுதிச் சுற்றுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் பாகிஸ்தான் ரசிகர்களை ஏமாற்றவில்லை. 34ஆவது ஓவர் வரை நீடித்த தொடக்க வீரரான ஜமான் 114 ஓட்டங்கள் குவித்தார். அப்போது பாகிஸ்தான் மொத்தம் 200 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ஜமான் போன்ற ஆட்டக் காரர்கள்தாம் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் எதிர்காலம் என அவ்வணித் தலைவர் சர்ஃபராஸ் அகமது பாராட்டியுள்ளார். 1 பில்லியன் பார்வையாளர்கள் இந்தியா - பாகிஸ்தான் பொருதிய ஐசிசி வெற்றியாளர் கிண்ண இறுதி ஆட்டத்தை உலகெங்கிலும் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தனர்.