மராவி முற்றுகையின் பின்னணியில் மலேசியா தேடும் பயங்கரவாதி

கோலாலம்பூர்: மலேசியா மிகத்தீவிரமாக தேடி வரும் பயங்கரவாதியான மஹ்முட் அஹமட் பிலிப்பீன்சில் உள்ள மராவி நகர் முற்றுகைக்கு முக்கிய பங்கு ஆற்றியிருப் பதாக வெளிநாட்டு உளவுத் துறை தக வல்கள் தெரிவிக்கின்றன. மலேசியாவின் ‘த நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ வெளியிட்ட செய்தியில் 41 வயது மலேசியரான அவர், மராவி நகர் ஐஎஸ் போராளிகளிடையே தலைமைத்துவ பங்கை ஆற்றியிருப்பதாகவும் குறிப்பிட்டது. தென் பிலிப்பீன்சில் உள்ள மராவி நகரில் நூற்றுக்கணக்கான பயங்கரவாதி களுடன் பிலிப்பீன்ஸ் ராணுவப் படை போரிட்டு வருகிறது. இதில் 300 பேருக்கு மேல் கொல்லப் பட்டதாகவும் 200,000 குடியிருப்பாளர் களுக்கு மேல் வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மராவி நகர் முற்றுகைக்குத் திட்டமிட்டு வழி நடத்திய மாட் பயங்கரவாத அமைப்பின் சகோதரர்களில் ஒருவரான அப்துல்லா, மஹ்முட் உட்பட சில பயங்கரவாத குழுக் களுக்கு சண்டையிடுவது குறித்து விவ ரிப்பதை காணொளி ஒன்று காட்டுகிறது.

இந்தக் குழுவில் தெற்கு ஆசியாவுக்கான ஐஎஸ் தலைவர் என்று கூறப்படும் 51 வயது இஸ்னிலோன் ஹாபிலோனும் ஒருவர் என்று நம்பப்படுகிறது. இவரது தலைக்கு ஐந்து மில்லியன் டாலர் நிர்ணயிக்கப்பட்டுள் ளது. இதன் மூலம் ஹாபிலோன் முன்பு கூறப் பட்டதுபோல காயம் அடையவில்லை என் பதும் தெரிய வந்துள்ளது. ஹாபிலோனுடன் மலேசிய பல்கலைக் கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர் மஹ்முட் அமர்ந்துள்ளார். அப்துல்லா குறிப்பாக மஹ்முட்டிடம் உள்ளூர் மொழியில் பேசுவதையும் அதற்கு மஹ்முட் உள்ளூர் மொழியிலேயே பதில் அளிப்பதையும் காணொளியில் காண முடிகிறது.

மலேசியா தேடி வரும் முக்கிய பயங்கரவாதி மராவி நகர் முற்றுகையில் பெரும் பங்கு ஆற்றியிருப்பதாக உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. படம்: த ஸ்டார்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இந்திய அணியும் கிரிக்கெட்டில் ஆட்சி செலுத்தும் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் சகாப்தம் பிரையன் லாரா கணித்திருக்கிறார். படம்: ஏஎப்பி

19 Oct 2019

லாரா கணிப்பு: கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும்

அரை சதம் அடித்த சிங்கப்பூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுரேந்திரன் சந்திரமோகன். படம்: ஐசிசி

19 Oct 2019

2019 டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தகுதிச் சுற்று: சிங்கப்பூர் பேரெழுச்சி