பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடிய மூன்று பேர் கர்நாடகாவில் கைது

பெங்களூர்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக் கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி கிண்ணத்தை வெல்வது இதுவே முதல்முறையாகும். இந்தப் போட்டி முடிவடைந்தவுடன் கர்நாடகாவில் உள்ள மூன்று இளைஞர் கள் பாகிஸ்தானின் வெற்றியைப் பட்டாசு வெடித்துக் கொண்டாடியிருக்கிறார்கள். குடகு மாவட்டத்தின் சுண்டி கொப்பா காவல் நிலைய எல்லைக்குள் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. ரியஷ், ஷாஹைர், அப்துல் சமான் ஆகிய மூன்று இளைஞர்களும் பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியதையடுத்து உள்ளூர் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினரான செங்கப்பா,

சுண்டி கொப்பா காவல் நிலையத்தில் அந்த இளைஞர்கள் மீது புகார் அளித்தார். இதையடுத்து மூன்று இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு மூவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது: மூவரும் எந்தக் கட்சியையும் சேர்ந்தவர்கள் அல்லர். ஆனால் அவர்கள் கிரிக்கெட் போட்டி யில் பாகிஸ்தான் வெற்றி பெற்றவுடன் பட்டாசு வெடித்து கொண்டாடியிருக் கிறார்கள். இதை அருகில் இருந்த வர்கள் கண்டித்துள்ளார்கள். இதையடுத்து அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.